பழனி கோவிலில் நடிகை சினேகா கணவருடன் சாமி தரிசனம்

பழனி கோவிலில் நடிகை சினேகா தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.;

Update:2022-01-04 23:26 IST
பழனி:

பழனி மலைக்கோவிலுக்கு நடிகை சினேகா தனது கணவரும், நடிகருமான பிரசன்னா மற்றும் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் வளாகத்திலேயே சற்று நேரம் அமர்ந்திருந்தனர்.

அதன் பிறகு வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தார். மூலவர் தண்டாயுதபாணி சுவாமியை சினேகா மற்றும் அவரது குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து போகர் சன்னதியிலும் சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

தரிசனம் முடிந்து வெளியே வந்த சினேகாவுடன் ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்