காதலியை 2வது திருமணம் செய்தார் நடிகர் ஹரீஷ் உத்தமன்

தமிழில் பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான நடிகர் ஹரீஷ் உத்தமன் 2 வது திருமணம் செய்து கொண்டார்.;

Update:2022-01-21 22:50 IST
தமிழில் ‘தா’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரீஷ் உத்தமன். பின்னர் வில்லனாக நடிக்கத் தொடங்கிய அவர், பாண்டியநாடு, மீகாமன், யாகாவாராயினும் நா காக்க, தனி ஒருவன், பாயும் புலி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவர், மும்பையைச் சேர்ந்த மேக்கப் கலைஞர் அம்ரிதா கல்யான்பூரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்தார். ஒரே வருடத்தில் அவர்கள் விவாகரத்துப் பெற்றனர்.

பின்னர், மலையாள நடிகையான சின்னு குருவில்லாவை, ஹரீஷ் உத்தமன் காதலித்து வந்தார். சின்னு, மலையாளத்தில் நார்த் 24 காதம், கசபா, லுக்கா சுப்பி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் கேரளாவின் மாவேலிகராவில் இன்று பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்