தனுஷின் பொல்லாத உலகம் புரமோ வீடியோ

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தில் இடம் பெறும் பாடலின் புரமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.;

Update:2022-01-26 23:24 IST
நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்களான பொல்லாத உலகம் என்ற பாடலை நாளை (ஜனவரி 26, 2022) வெளியிட இருக்கிறார்கள். அதற்கு முன்னதாக தற்போது புரமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனது. இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்