அந்தமானில் வளரும் தமிழ் படம்

படத்தில் முக்கிய வேடத்தில் ராம்கி நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க வைக்க ஒரு முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.;

Update:2022-01-28 15:33 IST
பல தமிழ் படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தவர், சாய் சரவணன். இவர் ஒரு புதிய படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார். ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கே.பி.தனசேகர், இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இவர் கூறுகிறார்:

படத்தில் முக்கிய வேடத்தில் ராம்கி நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க வைக்க ஒரு முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. போலீஸ் அதிகாரியாக நட்டி நட்ராஜ் நடிக்கிறார்.

அவருடன் மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ், சஞ்சனாசிங் ஆகியோரும் நடிக்கிறார்கள். பெரும்பகுதி படப்பிடிப்பு அந்தமானில் நடைபெறுகிறது. சில முக்கிய காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டன.’’

மேலும் செய்திகள்