கவர்ச்சியில் கலக்கும் கிரண்

கிரணின் கவர்ச்சி புகைப்படங்களால் அவரது ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர். 41 வயதானாலும் கிரண் அழகுக்கு மவுசு குறையவில்லை என்றும் ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகிறார்கள்.;

Update:2022-03-13 15:22 IST
2002-ம் ஆண்டில் வெளியான ‘ஜெமினி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் கிரண். இந்த படத்தில் அவரது துறுதுறு நடிப்பும், வசீகரிக்கும் அழகும், கொஞ்சல் பேச்சும் பெரிய அளவில் பேசப்பட்டன. ஏராளமான ரசிகர்களும் அவருக்கு கிடைத்தனர். அதனைத்தொடர்ந்து ‘வில்லன்’, ‘அன்பே சிவம்’, ‘வின்னர்’, ‘தென்னவன்’, ‘ஆம்பள’, ‘முத்தின கத்திரிக்கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சமூக வலைதளங்களில் படுபிசியாக இருக்கிறார் கிரண். அடிக்கடி தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டும் வருகிறார். விதவிதமான உடைகள் அணிந்து தன்னை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து, அந்த படங்களை தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும் வளைந்து நெளிந்து ஆடும் வீடியோக்களையும் பதிவிடுகிறார்.

கிரணின் கவர்ச்சி புகைப்படங்களால் அவரது ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர். மேலும் ‘41 வயதானாலும் உங்கள் அழகுக்கு மவுசு குறையவில்லை’, ‘தினமும் பாலில் குளிப்பீர்களா?’ என்றும் ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகிறார்கள். இதனால் கிரண் மிகவும் பூரித்து போயிருக்கிறார். இன்னும் விதவிதமான கலக்கல் புகைப்படங்கள் எடுத்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்