டர்மெரிக் மீடியா மற்றும் ஆஹா தமிழ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்..

டர்மெரிக் மீடியா மற்றும் ஆஹா தமிழ் புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்கள் குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.;

Update:2022-09-09 22:42 IST

20 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ஆஹா தமிழ் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.

இந்த திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'வெண்கடல்' சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'கைதிகள்' சிறுகதையைத் தழுவி உருவாக்கப்படுகிறது. இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் இந்தப் படத்தை இயக்குகிறார்.

சிறந்த இலக்கியப் படைப்புகள் வெற்றிகரமான திரைப்படங்களாகவும் ரசனைக்கு ஏற்றவாறு அமைய வேண்டும் என்பதற்காக எழுத்தாளர் ஜெயமோகனின் மூலக்கதைக்கு ஈடுகொடுக்கக்கூடிய மிகச்சிறந்த திரைக்கதையாக வடிவமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் தலைப்பு, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்