அரவிந்த் சாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்துள்ள படம் சதுரங்க வேட்டை 2. இந்த படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.;

Update:2022-07-20 22:37 IST

கடந்த 2014-ஆம் ஆண்டு மனோபாலா தயாரிப்பில் நட்டி நடராஜ் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் 'சதுரங்க வேட்டை'. அரவிந்த் சாமி நடிக்க 'சதுரங்கவேட்டை' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

இப்படத்தை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த 'சலீம்' படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கி உள்ளார். முந்தைய பாகத்தின் இயக்குனர் வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.

தயாரிப்பாளர் மனோபாலாவின் பிக்டர்ஸ் ஹவுஸ் அண்டு சினிமா சிட்டி நிறுவனம் தயாரித்துள்ள சதுரங்க வேட்டை 2 திரைப்படம் ஆன் ஸ்கை டெக்னாலஜி பிரைவெட் லிமிடேட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் வெளியிட இருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் அக்டோபர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்