சரத்குமாருடன் இணைந்த அசோக் செல்வன்.. வைரலாகும் போஸ்டர்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் அசோக் செல்வன். இவர் தற்போது பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.;

Update:2023-05-18 22:09 IST

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்