கவனம் ஈர்க்கும் ரெஜினா பட டீசர்

இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரெஜினா". இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.;

Update:2023-06-01 22:15 IST

மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரெஜினா". இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ். ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து "ரெஜினா" படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. விறுவிறுப்பாக உருவாகியுள்ள இந்த டீசரை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்