மீண்டும் இணைகிறது தனுஷ்- அருண் மாதேஸ்வரன் கூட்டணி

வரலாற்று பாணியில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தனுஷ் நடிப்பில் அருண் மதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.;

Update:2023-08-21 22:11 IST

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் நடிகர் தனுஷ் மீண்டும் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் அருண் மதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்