தனுஷ் படத்தில் இணைந்த விஜய் பட நடிகை.. ட்ரீட் நிச்சயம்

நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.;

Update:2023-08-14 23:11 IST

நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட நடிகர் தனுஷ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது.

இதனிடையே தனுஷின் 51-வது படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த பூஜையில் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ராஷ்மிகா, விஜய்யின் 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்