ஜெயம் ரவி நடித்த அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தை பத்தி உங்களுக்கு தெரியுமா ?
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;
கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' அருண்மொழி வர்மன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அருண்மொழி வர்மன் என்ற பேரரசர் மிகவும் அமைதியானவர். உதவும் தன்மை கொண்டவர். யார் மனதும் புண்படக் கூடாது என்று நினைப்பவர்.
இவர் மிருகங்களிடம் பேசும் திறன் கொண்டவர். அதாவது, மிருகங்கள் நினைப்பதை புரிந்து கொள்ளும் அளவிற்கு திறமையும் பாசமும் கொண்டவர். எதிரி நம் நாட்டினராக இருந்தாலும் அவருடன் நட்புடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். இப்படியான சிறப்பு மிக்க கதாபாத்திரத்தில் தான் ஜெயம் ரவி நடித்துள்ளார்.