நீ தங்குவியா இந்த வூட்டுல? மாவீரன் படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்

’மாவீரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.;

Update:2023-08-16 23:13 IST

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய இப்படம் ரூ.89 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. 'மாவீரன்' திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், 'மாவீரன்' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இப்பொழுதுதான் 'மாவீரன்' படம் பார்த்தேன். மக்களை வேறு இடங்களுக்கு குடியமர்த்துவதில் உள்ள அரசியலை, நல்ல முறையில் படமாக எடுத்துள்ளீர்கள். படத்தின் கற்பனை பகுதி அருமையாக இருந்தது, அரசியல் தாக்கமாக இருந்தது. நீ தங்குவியா இந்த வூட்டுல? படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்