வைரலாகும் ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியது.;

Update:2022-06-24 23:26 IST

பல வெற்றிப் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ருத்ரன்'. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மட்டும் ரூ. ஒரு கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ருத்ரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்