சிம்பு கொடுத்த கவுதம் கார்த்திக் படத்தின் அப்டேட்

தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.;

Update:2023-08-25 22:14 IST

அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிரிமினல்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரில் டீசர் மற்றும் ஆடியோ விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்