முத்தையா சாருக்காகதான் இந்த படத்தில் நடித்தேன் -ஸ்ரீ திவ்யா

விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'ரெய்டு'. இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Update: 2023-11-06 19:07 GMT

இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் 'ரெய்டு'. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

நடிகை ஸ்ரீ திவ்யா பேசியதாவது, 'ரெய்டு' படத்தில் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். 'மருது' படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்