நிம்மதியாக இருந்த நாட்களை பொருட்படுத்துவதில்லை - இயக்குனர் செல்வராகவன் பதிவு

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். இவர் நடித்துள்ள 'பகாசூரன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.;

Update:2022-12-11 22:11 IST

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனரான செல்வராகவன் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் இயக்கிய 'நானே வருவேன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர் தற்போது 'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எத்தனையோ நாள் நாம் நிம்மதியாய் இருந்திருக்கிறோம். கடவுளின் அருள். ஆனால் அதை பெரிதாய் பொருட்படுத்துவதில்லை. என்றோ ஒரு நாள் பிரச்சனை என்றால் " ஐயோ அம்மா கடவுளே காப்பாத்து" தான்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு ரசிகர்கள் 'கஷ்டத்தில் தான் கடவுள் நியாபகம் வருகிறது' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்