விஜய்யை வைத்து படம் இயக்குவேன் - இயக்குனர் ஹரி

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருந்த படம் யானை. யானை திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.;

Update:2022-07-10 22:21 IST

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருந்த படம் யானை. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இயக்குனர் ஹரியின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் ஹரி "விஜய்யை வைத்து படம் இயக்கும் ஆசை உள்ளது. அவரை பல முறை சந்தித்து இருக்கிறேன். பல கதைகள் கூறியுள்ளேன் வருங்காலத்தில் விஜய்யை வைத்து நிச்சயம் படம் இயக்குவேன்" என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்