ரசிகர்களை கவரும் கட்டா குஸ்தி திரைப்படம்

விஷ்ணு விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.;

Update:2022-12-05 23:34 IST

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி உள்ளது. 'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

இந்நிலையில் காமெடி, ஆக்‌ஷன், எமோஷ்னல் என அனைத்தையும் உள்ளடக்கிய படமாக திரையரங்குகளில் வெளியான கட்டா குஸ்தி குடும்ப ரசிகர்கள், இளைஞர்கள், நகைச்சுவை பிரியர்கள் என பலரையும் கவர்ந்து வெற்றிநடை போடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்