'கைதி' இந்தி ரீமேக் டீசர் வெளியீடு.. குழப்பத்தில் ரசிகர்கள்..

'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலோ' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

Update: 2022-11-23 18:00 GMT

மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலோ' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரின் இறுதியில் சூலம் கொண்டு காரை குத்துவது போன்ற காட்சி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்