சிவகார்த்திகேயனுடன் இணையும் மிருணாள் தாகூர்?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்திலும் நடித்து வருகிறார்.;

Update:2023-06-25 22:13 IST

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்திலும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எஸ்கே21' படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 'எஸ்கே22' படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 'எஸ்கே22' படத்தில் நடிக்கவிருக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் 'சீதா ராமம்' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்