மத போதகரான 'ஈரமான ரோஜாவே' மோகினி

மோகினி தற்போது அமெரிக்காவில் கிறிஸ்தவ மத போதகராகவே மாறி போயிருக்கிறார்.;

Update:2022-08-16 14:51 IST

தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் அழகான நடிகையாக அறியப்பட்டவர், மோகினி. 1991-ம் ஆண்டு கேயார் இயக்கிய 'ஈரமான ரோஜாவே' படத்தின் மூலம் அறிமுகமானார். 'புதிய மன்னர்கள், 'நாடோடி பாட்டுக்காரன்' போன்ற படங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாகவே மாறி போனார். பச்சை நிற கருவிழி கொண்டதால் 'பூனை கண்ணழகி' என செல்லமாக அழைக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்து போகவே, சினிமாவுக்கு முழுக்கு போட்டார். பரத் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ருத்ரகேஷ் என்ற மகன் இருக்கிறார்.

இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார், மோகினி. இந்து மதத்தை சேர்ந்தவரான அவர், சமீபத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார். தற்போது அமெரிக்காவில் கிறிஸ்தவ மத போதகராகவே மாறி போயிருக்கிறார்.

இதுகுறித்து கேள்வி எழுப்புவோரிடம் ''எதுவும் கெட்டுபோகவில்லை. எனது பாதையில் நான் சரியாகவே சென்று கொண்டிருக்கிறேன்'', என திடமாக பதிலளிக்கிறாராம், மோகினி.

Tags:    

மேலும் செய்திகள்