மீண்டும் இணைந்த அருள்நிதியின் 'டைரி' பட கூட்டணி

அருள்நிதி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டைரி’. இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கியிருந்தார்.;

Update:2023-06-09 23:45 IST

அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டைரி'. இப்படத்தை பொல்லாதவன், ஆடுகளம், ருத்ரன் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்திருந்தார். உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து உருவாகி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் டைரி படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ள 12அது படத்தை இன்னாசி பாண்டியன் இயக்கவுள்ளார். இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்