தனுஷ் படத்தின் அப்டேட் கொடுத்த செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் நானே வருவேன். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.;

Update:2022-07-14 22:37 IST

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்திருக்கிறார். இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தான் டப்பிங் செய்வது போல் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்