வெளியானது கார்கி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள படம் கார்கி. கார்கி திரைப்படம் ஜூலை 15- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.;

Update:2022-07-13 23:09 IST

இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'கார்கி'. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

'கார்கி' படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. 'கார்கி' திரைப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான கார்கி படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'யாத்ரீ' வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்