கேரள சட்டசபையில் திரையிடப்பட்ட ஒரே மலையாள படம்

கேரள மாநில கம்யூனிஸ்டு கட்சியின் சட்டசபை உறுப்பினர் முகமது மோசின் கதாநாயகனாக நடிக்க, கேரள சட்டசபையில் திரையிடப்பட்ட ஒரே மலையாள படம், ‘தீ.’;

Update:2022-07-01 15:45 IST

இந்தப் படம் தமிழில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இதில் கதாநாயகியாக சாகரா நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் நடித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் உன்னிமேனன் கதாநாயகனுக்கு தந்தையாக நடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

டி.மலையமானுடன் இணைந்து படத்தை தயாரித்ததுடன், பாடல்கள் எழுதி இயக்கியும் இருக்கிறார், அனில் வி.நாகேந்திரன். 'வசந்தத்திண்டே கனல் வழிகளில்' என்ற மலையாள படத்தில் நம்மூர் சமுத்திரக்கனியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர், இவர்தான். அந்தப் படத்தில் கம்யூனிச சித்தாந்தத்தை தென்னிந்தியாவுக்கு கொண்டுவந்த கிருஷ்ணன் பிள்ளை வாழ்க்கை வரலாற்றில், அவரது கதாபாத்திரத்தில், கதைநாயகனாக சமுத் திரக்கனி நடித்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்