பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது -'யானை' பட கலை இயக்குனர் மைக்கேல்

பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்கிறார் ‘யானை’ பட கலை இயக்குனர் மைக்கேல்.;

Update:2022-07-15 15:20 IST

ஹரி இயக்கி, அருண் விஜய் நடித்த 'யானை' படத்தின் கலை இயக்கத்தை ஒட்டுமொத்த திரையுலகமும் பாராட்டியது. அதற்கு காரணமாக இருந்தவர், கலை இயக்குனர் மைக்கேல்.

இவர் கூறுகிறார்:-

"என் சொந்த ஊர், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம். சென்னை ஓவிய கல்லூரியில் படித்தேன். சிறுவயதில் இருந்தே ஓவியம் மீது ஆர்வம் அதிகம். கலை இயக்குனராக அதுவே காரணம். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்சில் பயிற்சி பெற்றேன். 'கோச்சடையான்' படத்தில் சில மாதங்கள் பணிபுரிந்தேன்.

கலை இயக்கத்தில் நிறைய சாதிக்க வேண்டும். பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது" என்கிறார், கலை இயக்குனர் மைக்கேல்.

Tags:    

மேலும் செய்திகள்