அப்போ மிஸ் பண்ணவங்க, இப்போ மிஸ் பண்ணிடாதீங்க.. சித்தா படத்தின் புது அப்டேட்

சித்தா திரைப்படத்தை இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. சித்தா படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார்.;

Update:2023-11-23 23:10 IST

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார்.

இந்த படத்திற்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், சித்தா படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி சித்தா திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் நவம்பர் 28-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்