ஒர்கவுட்டான சமந்தா- விஜய் தேவரகொண்டா கெமிஸ்ட்ரி.. குஷி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சமந்தா -விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான திரைப்படம் 'குஷி'. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.;

Update:2023-09-05 22:18 IST

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'குஷி'. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில், 'குஷி' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'குஷி' திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.70.23 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்