சிறப்பு பேட்டி
“காதலர் பின்னால் போய்விடுவேன்”

டி.வி. நிகழ்ச்சி மூலம் பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா, தனது சம்பளம் மற்றும் ‘கால்ஷீட்’ விவகாரங் களில், புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார்.
அவர் நடித்த பட விளம்பர நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் கலந்து கொள்ள ரூ.5 லட்சம் சம்பளம் கேட்கிறாராம். கடை திறப்பு விழாக்கள் சென்னையில் நடை பெறுவதாக இருந்தால், ரூ.5 லட்சம்.

வெளிநாட்டு நிகழ்ச்சிகள் என்றால் ரூ.10 லட்சம் கேட்கிறார். அதோடு விமானத்தில், மூன்று முதல் வகுப்பு டிக்கெட் வேண்டும் என்று கேட்டு வாங்குகிறார். தற்போது அவர் ஒருவர் மீது காதல்வசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

“உனக்கு சினிமா வேண்டாம்...நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்” என்று அந்த காதலர் அழைத்தால், சினிமாவை தூக்கி வீசி விட்டு, அவர் பின்னால் போய் விடுவேன் என்கிறார், ஓவியா!