ரஜினியுடன் அஜித், விஜய் இணைந்தால் பெரிய மாற்றத்தைக்கொண்டு வர முடியும் -நடிகர் எஸ்.வி.சேகர்

ரஜினியுடன் அஜித், விஜய் இணைந்தால் பெரிய மாற்றத்தைக்கொண்டு வர முடியும் என நடிகர் எஸ்.வி சேகர் கூறி உள்ளார்.

Update: 2017-06-24 08:20 GMT
சென்னை

அரசியலை பிழைப்பாக நடத்துபவர்கள் ரஜினியை அரசியலுக்கு வரக்கூடாது என சொல்லக்கூடாது. சினிமா நடிகர் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்பவர்கள் இவர்கள் யார். அரசியல் களத்தில் ரஜினியுடன் அஜித், விஜய் இணைந்தால் பெரிய மாற்றத்தைக்கொண்டு வர முடியும் என நடிகர் எஸ்.வி சேகர் கூறினார்.

கடந்த 22 ந்தேதி நடிகர் விஜய் பிறந்த நாளின் போது நடிகர் எஸ்.வி சேகர் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அப்போது அவர் வருங்கால முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

    வருங்கால முதல்வருக்கு வாழ்த்துக்கள் | SV Sekar's birthday wish to Vijay ... https://t.co/4dp5Ii25ME
    — S.VE.SHEKHER (@SVESHEKHER) June 21, 2017


மேலும் செய்திகள்