இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் வரலாம் -உளவுத்துறை

ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 உலக உளவுத்துறை நிறுவனக்கள் கண்காணித்து வருகின்றன.

Update: 2018-09-18 07:06 GMT
ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடந்து வருகிறது.  இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியின் போது  சர்வதேச பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிமும் அவனது கூட்டாளிகளும்  போட்டியை காண வரலாம்  என உலக அளவில் உள்ள 6  உளவுத்துறை நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இது குறித்த தகவல் இந்திய உளவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது டி நிறுவனம் ஆகியோருக்கு நெருக்கமான இரண்டு தீவிரவாதிகள், இந்த  போட்டியை காண வர வாய்ப்புள்ளதாக உளவுத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை மற்றும் கராச்சியில் இருந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களில் சிலர் இந்த போட்டியை பார்க்க துபாய்க்கு ஏற்கனவே வந்து விட்டனர்.

தாவூத் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மகிழ்ச்சியை அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல், சூதாட்டத்திற்கு  பயனபடுத்துவது உலகறிந்த ரகசியம்.

இந்தியாவை சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகள் மட்டுமல்லாது,  இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றின் உளவுத்துறை அதிகாரிகள் இந்த முக்கிய தகவலுக்கு பிறகு அதிக கண்காணிப்பில்  உள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிகான டிக்கெட்டுகள்  விருந்தினர் பகுதிக்கு  1600 டாலர் (ரூ. 1.15 லட்சம்) ஆகும்.

மேலும் செய்திகள்