ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: பஞ்சாப் அணிக்கு 161 ரன்கள் இலக்கு
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 18-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக டு ப்ளசிஸ் 54 (38) ரன்கள், டோனி 37 (23) ரன்கள், ஷேன் வாட்சன் 26 (24) ரன்கள், அம்பத்தி ராயுடு 21 (15) ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆர்.அஸ்வின் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.