ஒரு நாள் போட்டி: சுப்மன் கில் புதிய சாதனை படைக்க சரியான வாய்ப்பு

ஒரு நாள் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எடுக்க கில்லுக்கு இன்னும் 182 ரன்கள் தேவையாக உள்ளன.;

Update:2026-01-11 13:51 IST

புதுடெல்லி,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இந்த போட்டி தொடரை பயன்படுத்தி புதிய சாதனை படைக்க சரியான வாய்ப்பு கிடைத்து உள்ளது.

அவர் ஒரு நாள் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எடுக்க இன்னும் 182 ரன்கள் தேவையாக உள்ளன. அவர் இதுவரை 58 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில், இதனை பூர்த்தி செய்து விட்டால், விரைவாக 3 ஆயிரம் ரன்களை எடுத்த இந்தியர் என்ற சாதனையை கில் படைப்பார்.

இதேபோன்று உலக அளவில், தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரரான ஹாசிம் ஆம்லாவுக்கு அடுத்து விரைவாக 3 ஆயிரம் ரன்களை எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை பெறுவார். ஏனெனில், ஆம்லா 57 இன்னிங்ஸ்களில் விளையாடி 3 ஆயிரம் ரன்களை எடுத்து, இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய முதல் போட்டியில், இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் புதிய சாதனையை படைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து காணப்படுகின்றன.

67 இன்னிங்ஸ் விளையாடியுள்ள அவர் இந்த ஒரு நாள் போட்டி தொடரில் 83 ரன்கள் சேர்த்தால் 3 ஆயிரம் ரன்களை எடுத்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை அடைவார். ஷிகர் தவானை (72 இன்னிங்ஸ்) பின்னுக்கு தள்ளுவார்.

இன்றைய முதல் போட்டியிலேயே அவர் 3 ஆயிரம் ரன்கள் சேர்த்தால், ஒட்டு மொத்தத்தில் 3-வது விரைவான பேட்ஸ்மேன் என்ற சாதனையை பாகிஸ்தானின் பாபர் ஆசமுடன் பகிர்ந்து கொள்வார்.

Tags:    

மேலும் செய்திகள்