ரஞ்சி கோப்பை : தமிழ்நாடு - டெல்லி அணிகள் மோதிய போட்டி 'டிரா'

தமிழ்நாடு - டெல்லி அணிகள் மோதிய போட்டி 'டிரா'வில் முடிந்தது;

Update:2022-02-20 17:38 IST
கவுகாத்தி,

கொரோனாவல் ஒத்திவைக்கப்பட்ட ரஞ்சி டிராபி போட்டிகள் தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது. இதில் கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் மோதின. 

அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 141.2 ஓவர்கள் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 452 ரன்கள் குவித்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் களமிறமிறங்கிய தமிழ்நாடு அணி  சிறப்பாக விளையாடியது .குறிப்பாக தமிழ்நாடு அணியின் ஷாருக்கான் அதிரடியாக விளையாடி 20 பவுண்டரி மற்றும் 10 சிக்சர்களுடன்  194 ரன்கள் குவித்து  ஆட்டமிழந்து 6 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார்.மேலும் சிறப்பாக விளையாடிய பாபா இந்திரஜித் சதம் அடித்து 117 ரன்களில் ஆட்டமிழந்தார்  ,ஜெகதீசன் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தார். 

இறுதியில் தமிழ்நாடு அணி 494 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது .

42 ரன்கள் பின்தங்கிய நிலையில் டெல்லி அணி தனது இரணடாவது இன்னிங்க்சில் விக்கெட் இழப்பின்றி 228 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்நிலையில் 4ம் நாள் ஆட்ட நேர முடிவால் தமிழ்நாடு - டெல்லி அணிகள் மோதிய  போட்டி 'டிரா'வில் முடிந்தது 

மேலும் செய்திகள்