விஜய் ஹசாரே கோப்பை: தமிழ்நாடு அணி வெற்றி
திரிபுரா அணி 42.4 ஓவர்களில் 205 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது;
மும்பை,
33வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதி வருகின்றன.இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு - திரிபுரா அணிகள் மோதின.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திரிபுரா அணியின் கேப்டன் முரா சிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது. தமிழ்நாடு அணியில் ஆந்த்ரே சிரார்த்த 70 ரன்கள் எடுத்தார்.இந்திரஜித் 48 ரன்களும், முகமது அலி 46 ரன்களும் எடுத்தனர்
தொடர்ந்து 260 ரன்கள் இலக்குடன் விளையாடிய திரிபுரா அணி 42.4 ஓவர்களில் 205 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் தமிழ்நாடு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணியில் சிறப்பாக பந்துவீசிய குர்ஜன்பீத் சிங் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.