இன்னும் 138 ரன்கள்...ஒருநாள் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா நிகழ்த்த இருக்கும் சாதனை

ரவீந்திர ஜடேஜா இன்னும் 138 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த இருக்கிறார்.;

Update:2026-01-07 07:19 IST

சென்னை,

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த அணியில், ஜடேஜா இடம் பிடித்திருக்கிறார்.

இந்நிலையில், இந்த நியூசிலாந்து தொடர் அவரது ஒருநாள் கெரியருக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. இந்த ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் ரவீந்திர ஜடேஜா மேலும் 138 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த இருக்கிறார்.

138 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களையும், 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் இடம் பிடிப்பார்

இந்திய அணிக்காக கடந்த 2009-ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ரவீந்திர ஜடேஜா இதுவரை 207 போட்டிகளில் விளையாடி 232 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு பேட்டிங்கிலும் 13 அரை சதங்களுடன் 2862 ரன்களை அடித்துள்ளார்.

தொடர் அட்டவணை

1வது ஒருநாள் போட்டி: ஜனவரி 11, 2026 - பிசிஏ ஸ்டேடியம், வதோதரா

2வது ஒருநாள் போட்டி: ஜனவரி 14, 2026 - சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், ராஜ்கோட்

3வது ஒருநாள் போட்டி: ஜனவரி 18, 2026 - ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம், இந்தூர்

Tags:    

மேலும் செய்திகள்