முதல் டி20: இலங்கை - பாகிஸ்தான் நாளை மோதல்

பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சென்று டி20 தொடரில் ஆடுகிறது.;

Update:2026-01-06 21:37 IST

கொழும்பு ,

20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. நாளை இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்