அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசு ஆணையர் வழங்கினார்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஆணையர் ரவிச்சந்திரன் பரிசு வழங்கினார்.

Update: 2019-04-30 23:00 GMT
திருச்சி,

தமிழகத்தில் நேற்று முன்தினம் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் திருச்சி மாநகராட்சி பள்ளிகளான செந்தண்ணீர்புரம் உயர்நிலைப்பள்ளி, எடமலைப்பட்டி புதூர் உயர்நிலைப்பள்ளி, திருவானைக்கோவில் உயர்நிலைப்பள்ளி, காமராஜர் நகர் உயர்நிலைப்பள்ளி, கே.கே.நகர் உயர்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் 10-ம் வகுப்பில் படித்த மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் கீர்த்தனா, காயத்ரி, ஹரிணி, விஜய தர்ஷிணி, காவ்யா, சாகுபர் நிஷா, மாணவர்கள் சுந்தரமூர்த்தி, சிவதாசன் ஆகிய 8 நபர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்தது. அப்போது மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார். மேலும், சிறப்பாக செயல்பட்டதற்காக ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் திருஞானம், துரைமுருகன், குணசேகரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்