மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 110 லிட்டர் சாராயம் பறிமுதல் தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு

மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-08-04 22:15 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் போலீஸ் சரகம் உக்கடை நண்டலாற்று பாலம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடி விட்டார். இதை தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிளில் இருந்த சாக்கு மூட்டையில் சோதனை செய்தனர். அதில் 110 லிட்டர் சாராயம் இருந்தது. இதை தொடர்ந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தப்பியோடியவர் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு மத்தளவாடி கீழத்தெருவைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் விஜயன் என்பதும், காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு சாராயம் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

வலைவீச்சு

இதுதொடர்பாக பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயனை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல மங்கநல்லூர் ரெயில்வே கேட் அருகில் சாராயம் விற்பனை செய்த ஆற்றங்கரை தெருவை சேர்ந்த முருகையன்(வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்