தஞ்சையில் மாநில அளவிலான கராத்தே போட்டி 800 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு

தஞ்சையில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் 800 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Update: 2019-12-01 23:00 GMT
தஞ்சாவூர்,

ஜப்பான் ‘ஹயா‌ஷி-கா சிட்டோ ரியூ காய்’ கராத்தே கழகம் சார்பில் 3-வது மாநில அளவிலான கராத்தே போட்டி தஞ்சை ரெட்டிப்பாளையத்தில் நேற்று நடந்தது. இதன் தொடக்க விழாவிற்கு சிங்காரவேல் தலைமை தாங்கினார். சங்கீதா வரவேற்றார்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதாலிங்கராஜ், தமிழர் பாதுகாப்பு சங்க நிறுவனர் ராம.பழனியப்பன், தமிழ்ப்பல்கலைக்கழக பேராசிரியர் தேவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

800 வீரர், வீராங்கனைகள்

போட்டியை நீலமேகம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிரு‌‌ஷ்ணசாமிவாண்டையார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசினார். விழாவில் வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணை செயலாளர் ராம.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 800-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் வயது அடிப்படையில் நடைபெற்றது. முடிவில் போட்டி ஒருங்கிணைப்பாளர் ராஜே‌‌ஷ்கண்ணா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்