பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற டாக்டருக்கு ஆயுள் தண்டனை
டாக்டர் பிரடெரிக் பெஷியர் பொட்டாசியம் குளோரைடு கலந்த விஷ ஊசியை நோயாளிகளுக்கு செலுத்தி உள்ளார்.;
பாரீஸ்,
பிரான்சின் பெசான்கான் நகரை சேர்ந்த டாக்டர் பிரடெரிக் பெஷியர் (53 வயது). இவர் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு நடந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
அதாவது ஆபரேஷன் செய்யும்போது மயக்கம் அடைவதற்காக நோயாளிகளுக்கு பொட்டாசியம் குளோரைடு கலந்த விஷ ஊசியை செலுத்தி உள்ளார். இதனால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவரே அதற்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி தன்னை கதாநாயகன் போல காட்டி உள்ளார். இதுபோன்று 2008 முதல் 2021-ம் ஆண்டு வரை 30 நோயாளிகளுக்கு அவர் விஷ ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் 12 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வேண்டுமென்றே விஷ ஊசி செலுத்தி 12 பேரை கொன்ற பெஷியருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.