சுரண்டையில் சேதமடைந்த செண்பக கால்வாய் தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

சுரண்டையில் சேதமடைந்த செண்பக கால்வாய் தடுப்பு சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2019-12-02 22:30 GMT
சுரண்டை, 

தென்காசி மாவட்டம் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் சுரண்டை பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி வருகிறது.

கடந்த வாரம் பெய்த மழையில் இரட்டை குளம் நிரம்பியது. இதனால் செண்பக கால்வாயில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏற்கனவே பலமிழந்து காணப்பட்ட செண்பக கால்வாய் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. சுரண்டையில் இருந்து சாம்பவர் வடகரை வழியாக தென்காசி மற்றும் கேரளா செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் இந்த வழியாக தான் செல்கின்றன.

எனவே இந்த பகுதியில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். ஆபத்து ஏற்படும் முன்பாக இடிந்து விழுந்த செண்பக கால்வாய் தடுப்புச்சுவரை சரிசெய்து, ரோட்டை அகலப்படுத்த வேண்டும். மேலும் பொதுநலன்கருதி ரோட்டில் இருந்து 3 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் அல்லது தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்