தவுட்டுப்பாளையம் பகவதியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

தவுட்டுப்பாளையம் பகவதியம்மன் கோவில் திருவிழா நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2019-12-04 22:30 GMT
நொய்யல்,

கரூர் மாவட்டம், திருக்காடுதுறை அருகே நத்தமேட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களில் புனிதநீரை எடுத்து கொண்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.பின்னர் பகவதியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபி‌‌ேஷகங்கள் நடந்தது. தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனை நடைபெற்றது.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

தொடர்ந்து பகவதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் பகவதியம்மனை வழிபட்டனர். இதில் சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மதியம் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்மன் வீதி உலாவும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்