கேங்மேன் பணி நியமனத்துக்கு பணம் கொடுத்து ஏமாந்தால் அரசு பொறுப்பேற்காது அமைச்சர் தங்கமணி பேட்டி

கேங்மேன் பணி நியமனத்துக்கு யாராவது பணம் கொடுத்து ஏமாந்தால், அதற்கு அரசு பொறுப்பேற்காது என புதுக்கோட்டையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Update: 2019-12-07 23:15 GMT
புதுக்கோட்டை,

தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ள தட்கல் மின் இணைப்பு முறையில் ஆண்டிற்கு 10 ஆயிரம் மின் இணைப்பு வழங்க உள்ளோம். தட்கல் மின் இணைப்பு முறை குறித்து சிலர் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

கேங்மேன் பணி நியமனத்தில் இடைத்தரகர்களுக்கு வேலையில்லை. முழுக்க முழுக்க வீடியோ பதிவுசெய்யப்பட்டு தான் தேர்வுகள் நடத்தப்படுகிறது. தேர்வில் உடல்தகுதி செய்யப்பட்டு எழுத்து தேர்வு மூலம் தான் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் எந்தவித முறைகேட்டிற்கும் வாய்ப்பில்லை.

பணம் கொடுத்து ஏமாந்தால்...

அதையும் தாண்டி யாராவது பணம் கொடுத்து ஏமாந்தால், அதற்கு அரசு பொறுப்பேற்காது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த முறையே நடைபெற்று வருகிறது. ஒப்பந்த பணியாளர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைத்து இருக்கிறோம். ஆனால் சில தவறான தகவல்களால் பலர் இதில் பங்கேற்கவில்லை. நேர்முகத்தேர்வு மூலமாக தகுதி வாய்ந்த ஒப்பந்த பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். மின்சாரத்துறை எந்த அளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு சென்னையில் தற்போது பெய்த கன மழையின் போதும், 5 நிமிடம் கூட மின்வெட்டு ஏற்படாமல் இருந்ததே சாட்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்