குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 6 மாணவர்கள் கைது
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தஞ்சாவூர்,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கரந்தையில் உள்ள கல்லூரி முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநகர செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
6 பேர் கைது
இந்த நிலையில் தஞ்சை மேற்கு போலீசார் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து அருண்குமார், அரவிந்த், சிலம்பரசன், மணிகண்டன், நந்தகுமார், ஆனந்தராஜ் ஆகிய 6 மாணவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளும் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.