அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் கலெக்டர் ஆய்வு

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை கலெக்டர் வினய் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-01-09 22:30 GMT
அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம், பாலமேட்டில் 16-ந்தேதியும், அலங்காநல்லூரில் 17-ந்தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

உலகப்புகழ் பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண ஏராளமானோர் வருகை தருவார்கள்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மதுரை மாவட்ட கலெக்டர் வினய் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானம், வாடிவாசல், மாடுகள் நிறுத்துமிடம், வெளியேறும் இடம், பார்வையாளர்கள் அமரும் பகுதி, காளைகள், மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யும் இடம், மருத்துவ பரிசோதனைகள் செய்யும் இடம் ஆகிய இடங்களில் கலெக்டர் வினய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் பேரூராட்சி நிர்வாகத்தினரால் சமப்படுத்தப்படும் பகுதிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன், வாடிப்பட்டி தாசில்தார் கிருஷ்ணகுமார், பேரூராட்சி செயல் அலுவலர்கள் சிவ குமார், தனபால், பேரூராட்சியின் இளநிலை உதவியாளர்கள் அங்கயற்கண்ணி, தனலெட்சுமி, துப்புரவு பணி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்