ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2020-07-17 07:54 GMT
ராமநாதபுரம்,

தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,525 மாணவர்களும், 7,506 மாணவிகளும் என மொத்தம் 14,031 பேர் தேர்வு எழுதினர்.

அதனை தொடர்ந்து நேற்று வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவுகளின்படி 5,916 மாணவர்களும், 7,149 மாணவிகளும் என மொத்தம் 13,065 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி மாணவர்களின் தேர்ச்சி 90.67 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 95.24 சதவீதமாகவும் உள்ளது.

மாவட்டம் முழுவதும் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 93.12 ஆகும். மாவட்டத்தில் 70 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதியவர்களில் 88.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 30 நபர்களில் 25 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்