தர்மபுரி மாவட்டத்தில் 5 உழவர் சந்தைகளில் 110 டன் காய்கறிகள் விற்பனை

தர்மபுரி மாவட்டத்தில் 5 உழவர் சந்தைகளில் 110 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.

Update: 2021-10-02 17:24 GMT
தர்மபுரி:
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளிலும் காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அந்தந்த உழவர் சந்தைகளில் குவிந்தனர். இந்த உழவர் சந்தைகளில் மொத்தம் 251 விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 24,546 பேர் காய்கறிகள் வாங்க உழவர் சந்தைகளுக்கு வந்துள்ளனர். மொத்தம் 11,0285 கிலோ (110 டன்) காய்கறிகள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.28 லட்சத்து 26 ஆயிரத்து 361 ஆகும்.
தர்மபுரி உழவர் சந்தையில் 55,217 கிலோ தமிழ் காய்கறிகளும், 7,261 கிலோ மலை காய்கறிகளும் என மொத்தம் 62,478 கிலோ காய்கறிகள் விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு ரூ.18 லட்சத்து 33 ஆயிரத்து 898 ஆகும். இந்த உழவர் சந்தைக்கு மொத்தம் 125 விவசாயிகள் 53 வகையான காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர். மொத்தம் 12,095 பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வந்துள்ளனர். இதேபோன்று பென்னாகரம் உழவர் சந்தையில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 140 மதிப்புள்ள 9,221 கிலோ காய்கறிகள் விற்பனையாகி உள்ளது. பாலக்கோடு உழவர் சந்தையில் ரூ.4 லட்சத்து 5 ஆயிரத்து 505 மதிப்புள்ள 16,045 கிலோ காய்கறிகளும், அரூர் உழவர் சந்தையில் ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 450 மதிப்புள்ள 8,590 கிலோ காய்கறிகளும், ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் ரூ.4 லட்சத்து 7 ஆயிரத்து 518 மதிப்புள்ள 15,991 கிலோ காய்கறிகளும் விற்பனையாகி உள்ளது.

மேலும் செய்திகள்