ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: ஒருவர் பலி

காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.;

Update:2026-01-11 20:12 IST

கென்பரா,

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. வெப்பம், அதிக காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், 70க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலமாகவும் காட்டுத்தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேவேளை, வீடுகள் உள்பட 300க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 3 லட்சத்து 50 ஆயிரம் ஹேக்டேர் நிலம் தீக்கிரையாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்